11.07.2009 இல் பேத்தாழை பொது நூலகத்திற்கான புதிய கட்டடம் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு. தா.உதயஜீவதாஸ் தலைமையிலும், செயலாளர் திரு. இ.வடிவேல் அவர்களின் வழிநடத்தலிலும் கிழக்கின் முதல் முதலமைச்சர் கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டு, 10.12.2011 அன்று கிழக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் மற்றும்
முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் கோலாகலமான
முறையில் திறந்து வைக்கப்பட்டது.
தற்பொழுது பேத்தாழை பொது நூலகத்தில் சுமார் 18000 க்கு மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. வீரகேசரி, தினகரன், தினக்குரல், மெட்ரோ நியூஸ், தினமின, Daily News, மித்திரன் வாரமலர் போன்ற தினசரி மற்றும் வாரப்
பத்திரிகைகள், சுகவாழ்வு, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு,
அவள் விகடன், கோகுலம், மங்கையர் மலர் போன்ற இலங்கை, இந்திய தமிழ் மாத, வார
சஞ்சிகைகளும் வாசகர்களின் பாவனைக்காக வழங்கப்படுகின்றன.
இரவல் பகுதி,
உசாத்துணைப் பகுதி, சிறுவர் பகுதி, கணினிப் பிரிவு, இணைய வசதி, போட்டோ பிரதி சேவை போன்ற பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது.
|
|
2011இல் நவீன முறையில்,
தொழினுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், 2012இல் தரம்-II ஆக தரமுயர்த்தப்பட்டது. 2012
ஆம் ஆண்டு பிராந்திய
உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட பொது நூலகங்களுக்கான
விருது வழங்கும் விழாவில் “சிறந்த தொழினுட்ப கட்டமைப்பைக் கொண்ட பொது நூலகம்“
என்கின்ற விருதினயும், 2013ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகமும், கல்வி அமைச்சும்
இணைந்து இலங்கையில் உள்ள நூலகங்களை தரப்படுத்தி விருது வழங்குகையில், பிரதேச
சபையின் கீழ் இயங்குகின்ற பொது நூலகங்களில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தினைப்
பெற்று, ஜனாதிபதியின் கரங்களினால் “சுவர்ண புரவர“ விருதினையும் பெற்றுக்
கொண்டது.
தொடர்ச்சியாக பொது நூலகத்துறையில் பல்வேறு பரிமாணங்களில்
வளர்ச்சிப் படிகளைத் தொட்டவாறு பிரதேச அளவில் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும்
தனது சேவையினை வழங்கி வந்த எமது நூலகம், உலகளாவிய ரீதியில் தனது பணியினை
விஸ்தரிக்கவும், அறியத்தரவும் உலகின் எந்த மூலையில் உள்ளவரும் இந்நூலகத்தினைப்
பார்வையிடவும் இங்குள்ள நூல் ஆவணங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்,
நூலகத்தின் பதிவு செய்யப்பட்ட வாசகர்கள் வீட்டிலிருந்தவாறே தமக்குத் தேவையான
நூல்களை முற்பதிவு செய்து இரவல் பெற்றுக் கொள்ளும் வசதிகளையும் உள்ளடக்கியதாக
“கொஹா“ (KOHA) மென்பொருள் மூலம் இலத்திரனியல் மயமாக்கப்பட்டு, “இணைய வழி நூலகத்
தகவல் அணுகுசேவையினை (OPAC) 2016ஆம் ஆண்டில் ஆரம்பித்து, இலங்கையிலேயே
இச்சேவையினை வழங்கிய முதலாவது பொது நூலகம் என்கின்ற பெருமையினையும் தனதாக்கிக்
கொண்டுள்ளது.
|
|