இன்றைய குறள்
பேத்தாழை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் ஆரம்பம்.
தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் சபையின் “நூலொன்றை வாசிப்போம், நாட்டினை கட்டியெழுப்புவோம்” எனும் இவ்வருட தொனிப் பொருளுக்கமைவாக பேத்தாழை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோய் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களை விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடாக தன்னிறைவை உருவாக்கும் நோக்கில் இவ்வருட தேசிய வாசிப்பு மாததிற்கான தொனிப்பொருள் தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேத்தாழை பொது நூலகத்தில் மகளிர்தின நிகழ்வுகள்
2020 மார்ச் 08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை பொது நூலகத்தில் “பெருமைமிகு பெண்களுக்கு எதிரான சிறுமைகளை ஒழிப்போம்” என்கின்ற மகுடத்தின் கீழ் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சணச அபிவிருத்தி வங்கி வாழைச்சேனைக் கிளையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சணச அபிவிருத்தி வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பேத்தாழை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்டத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஒரு சமூக உருவாக்கத்தில் பெண்களின் வகிபங்கே மிக முக்கியமானது என்கின்ற அடிப்படையில், குழந்தைகளை நற்பிரஜைகளாக உருவாக்குவதில் பெண்களே பெரும்பங்கு வகிப்பதனால், பெண்குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் இந்த சமூகத்திற்கு கௌரவம் சேர்ப்பவர்களாக உருவாக்குவதற்கு சிறுவயது முதலே வாசிப்பு பழக்கமும், புத்தகங்களுடனான தொடர்பும் மிகவும் இன்றியமையாதது அதனை பெண்களே முன்னெடுத்து வருகின்றனர். இதனை இன்னும் காத்திரமானதாக மாற்ற “வாசிக்கும் மகளிரால் உருவாக்கப்படுகின்ற சமூகமானது எத்தகைய காத்திரமானதாக உள்ளது என்பது குறித்தும், பெண்களின் தலைமைத்துவமும் பெண்களின் சமூகப் பணியும் இன்று வீட்டை மட்டுமல்லாது முழு உலகினையும் வழிநடத்துவதில் முன்னிற்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான தடைகளும் அவற்றை பெண்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள வரலாறுகள் பற்றியும் விழாவில் கலந்து கொண்ட அதிதிகளால் பதிவு செய்யப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களுக்கு சணச அபிவிருத்தி வங்கியினரால் மகளிர் தின நினைவாக சிறப்பு பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சணச அபிவிருத்தி வங்கி வாழைச்சேனைக் கிளையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சணச அபிவிருத்தி வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பேத்தாழை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்டத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களுக்கு சணச அபிவிருத்தி வங்கியினரால் மகளிர் தின நினைவாக சிறப்பு பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வும் வாணி விழாவும்.
பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வும் வாணி விழாவும்.
பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர் பகுதியில் வழமை போன்று இவ் வருடமும் சிறுவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பேத்தாழை பொது நூலகத்தில் இலவச ஆங்கில வகுப்பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பேத்தாழை பொது நூலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடாத்தப்பபட்டு வந்த இலவச ஆங்கில வகுப்பின் இறுதி நாள் நிகழ்வும், பாட நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 29.03.2019 அன்று இடம்பெற்றது.
கனேடிய ஆங்கில ஆசிரியரான ஜோன் டேர்னரினால் நடாத்தப்பட்ட இரண்டு மாத கால இலவச ஆங்கில இலக்கண பாடனெறியில் இருபதுக்கு பேற்பட்ட மாணவர்கள் கற்பிக்கப்பட்டனர்.
இப்பாட நெறி கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து பேத்தாழை பொது நூலகத்தில் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேத்தாழை பொது நூலகத்தில் சுவாமி விபுலானந்தரின் 127 வது ஜனன தினம் அனுஸ்டிப்பு
பேத்தாழைப் பொதுநூலகத்தில் சுவாமி விபுலானந்தரின் 127 வது ஜனன தினம் 27.03.2019 அன்று சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை அன்றைய நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.